செய்திகள் :

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

post image

Doctor Vikatan:  நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நீரிழிவு என்பது உடலியக்கம் சார்ந்த (Metabolism)  ஒரு குறைபாடு.  டைப் 1 மற்றும் டைப் 2 என நீரிழிவில் இரண்டு வகை உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடல் எடை குறைவது இருக்கும்.

இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அந்தச் சுரப்பு அறவே இருக்காது. உடலிலுள்ள செல்கள், திசுக்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால், அவை குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைவதற்கான வாயில்தான் இன்சுலின். இது சுரக்கவே இல்லை என்றாலோ, குறைவாகச் சுரந்தாலோ, குளுக்கோஸ் உள்ளே போகாது.

அதன் விளைவாக செல்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. வெளியில் இருந்து வரும் உணவிலிருந்து எனர்ஜி கிடைக்காதபட்சத்தில், உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் தசை அடர்த்தியையும் எனர்ஜிக்காக உண்ண ஆரம்பிக்கும். 

அதுபோன்ற நிலையில்தான் டைப் 1 நீரிழிவாளர்கள், உடல் மெலிந்து காட்சியளிப்பார்கள்.

நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன்?

டைப் 2 நீரிழிவில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (insulin resistance) என்ற நிலை வரும். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என சொல்லலாம்.

முதலில் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது இல்லாத நிலையாக மாறும். இந்த வகை நீரிழிவிலும், முதலில் சொன்னதுதான் நடக்கும்.

அதாவது செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். 

நீரிழிவாளர்கள் உடல் மெலிந்து காணப்பட, நீர்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.

சருமம் வறண்டு, சுருங்கிப் போவதாலும் மெலிந்து காணப்படுவார்கள். ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருப்பது, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, நல்ல கொழுப்பு, நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றும்போது ஆரோக்கியான தோற்றத்துடன் இருக்கலாம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்

''மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம். அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந... மேலும் பார்க்க

IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?

நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது. உலக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கழுத்தில் படிந்திருக்கும் கருமை, நீரிழிவின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 26. கடந்த சில வருடங்களாக எனக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருக்கிறது. நான் அது சருமம் தொடர்பான பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நீரிழிவின்அறிகுறியாகஇருக்க... மேலும் பார்க்க

சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!

சோஷியல் மீடியாவில் 'டீடாக்ஸ் வாட்டர்' என்றாலே, வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்து அழகான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குடிப்பதுதான் ட்ரெண்டிங். இதையே தயாரிப்பதுபோல வீடியோ போட்டால் லைக்ஸ் பிச்சுக்கும். சரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, அதிகபட்சமாக எத்தனை ஸ்டென்ட்வரை பொருத்தலாம்?

Doctor Vikatan:இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், அதிகபட்சம் எத்தனை ஸ்டென்ட் வரை பொருத்திக் கொள்ளலாம். ஸ்டென்ட் பொருத்திக் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஆபத்து இல்லை என அர்த்தமா, அவர்கள் எந்த... மேலும் பார்க்க

'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர்

சென்னை இராயப்பேட்டையில் கடந்த ஜூலை மாதம் நஸ்ருதின் என்பவரை ஒரு நாய் கடித்திருக்கிறது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல்... மேலும் பார்க்க