தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!
சோஷியல் மீடியாவில் 'டீடாக்ஸ் வாட்டர்' என்றாலே, வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்து அழகான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குடிப்பதுதான் ட்ரெண்டிங்.
இதையே தயாரிப்பதுபோல வீடியோ போட்டால் லைக்ஸ் பிச்சுக்கும். சரி, அன்றாட வாழ்க்கையில் எல்லா நாளும் இந்த டீடாக்ஸ் வாட்டரை தயாரிக்க முடியுமா என்றால், வாய்ப்புக் குறைவு. இதற்கு என்ன தீர்வென்று திருவாரூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ் அவர்களிடம் கேட்டோம்.

''உங்க சமையலறையிலேயே சீரகம், கொத்தமல்லி (தனியா)ன்னு ரெண்டு மருத்துவரை வெச்சுக்கிட்டு, ஏன் மருந்தைத் தேடி அலையுறீங்க..? சீரகத் தண்ணி, கொத்தமல்லித் தண்ணி குடிச்சாலே பாதி பிரச்னைகள் பறந்து போயிருமே.
சீரகமும், கொத்தமல்லியும் வாத, பித்த, கப தோஷத்திலிருந்து உடலைச் சமநிலையில் வைப்பதற்கு உதவி செய்யும் இரண்டு சமனிகள் என்று சொல்லலாம்.
வயது வரம்பு இல்லாமல் பெரியவர்களிலிருந்து இருந்து சிறியவர்கள் வரைக்கும், கர்ப்பிணிப் பெண்கள் எல்லாருமே சீரகத் தண்ணீர், கொத்தமல்லி அருந்தலாம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துறது, உடல் சூட்டைக் குறைக்கிறது, வயிறு பிரச்னைகளைச் சரி செய்யுறதுன்னு இந்த ரெண்டு தண்ணியும் செய்யாத வேலையே இல்லை.
இதுமட்டுமில்லாம, வாயில் வர்ற புண்கள், துர்நாற்றம் இரண்டுக்குமே இது ஒரு சரியான தீர்வு.

சிறுநீரகப் பிரச்னை இருக்கிறவங்க மருத்துவரை கேட்டுவிட்டு கொத்தமல்லி தண்ணீர் குடியுங்க. சீரகத் தண்ணீர் இதுக்கும் ஒரு படி மேல..! எல்லாருமே எடுத்துக்கலாம். எந்த மருந்தா இருந்தாலுமே தொடர்ந்து 48 நாள் எடுத்துக்கணும், பிறகு 30 நாள் இடைவேளை விட்டு திருப்பி எடுத்துக்கணும்.
சீரகத் தண்ணியையும், கொத்தமல்லித் தண்ணியையும் ரெண்டு முறையில குடிக்கலாம். ஒண்ணு, கஷாயமா காய்ச்சிக் குடிக்கிற முறை. இன்னொண்ணு மருத்துவ பயன்பாட்டுக்கு.
மருத்துவ பயன்பாட்டுக்கு:
15 கிராம் சீரகம் அல்லது 15 கிராம் கொத்தமல்லி எடுத்து அதுல 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது 2 டம்ளர் அளவுக்கு வற்றி வரும் வரை காய்ச்சி குடிக்கலாம். 3 வயசுல இருந்து 5 வயது வரைக்கும் இருக்கிற குழந்தைகள், 15 முதல் 30 மில்லி வரைக்கும் அருந்தலாம். 5 வயசுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு 50 முதல் 100 மில்லி வரை கொடுக்கலாம். இதற்கு ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனை ரொம்ப முக்கியம்.

10 கிராம் சீரகம் அல்லது கொத்தமல்லியை ஒரு லிட்டர் தண்ணீர்ல போட்டு 100 மில்லி மட்டும் ஆவியானதும் குடிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாதது என்றாலும், ஏற்கெனவே இவற்றை குடிச்சி பழகினவங்க அப்படியே ஃபாலோ பண்ணலாம். முதல்முறை குடிக்கவிருக்கிறவங்க, ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனையைக் கேட்டு குடிக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR