செய்திகள் :

Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு

post image

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கிடையேயான போரில் இதுவரை காஸா பகுதியில் லான்செட் இதழின் ஆய்வின்படி 70,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள்.

அவர்களில் 59.1% பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். 1,64,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்ட கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் வீட்டுக்கு முன்பு போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் வீட்டுக்கு முன்பு போராட்டம்

அதனால், இஸ்ரேலுக்கான ஆதரவு போக்கிலிருந்து கத்தாரும் திரும்பியிருக்கிறது. ஐ.நா-வில் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக பேசத் தொடங்கியிருக்கின்றன.

காஸாவில் நடக்கும் அத்துமீறல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென, ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கிற்கு எதிராக, ஐ.நா ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தனர்.

மற்றொரு புறம், இஸ்ரேல் பசியையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐ.நா-வில் ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்திருந்தது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் மீதான அதிருப்தி வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று மீண்டும் காஸா மீது தரை வழி, வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை நோக்கி போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் பிரதமர் வீட்டுக்கு முன்பு போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் வீட்டுக்கு முன்பு போராட்டம்

இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் வசிக்கும் மக்கள் கூட இந்தத் தாக்குதல்களின் அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் பிணைக் கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினர் பிரதமர் நெதன்யாகுவின் ஜெருசலேம் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தரைவழித் தாக்குதல் தங்களின் அன்புக்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதனால் இஸ்ரேல் பிரதமரின் செயலுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்யும் அவர்கள், பிரதமர் இல்லத்துக்கு முன்பே டென்ட் அமைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

சொந்த நாட்டிலேயே தனக்கான ஆதரவு மனநிலை சரிந்து வருவதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சிக்கல் கூடியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே' - மோடிக்கு போன் செய்த ட்ரம்ப்; என்ன பேசினார்கள்?

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிர... மேலும் பார்க்க

CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview | Vikatan

தவெக தலைவர் விஜய்யின் திருச்சி மற்றும் அரியலூர் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் குறித்து தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச்செ... மேலும் பார்க்க

``கட்சிப் பணி செய்ய முடியாதவர்கள் ஒதுங்கி ஓய்வெடுங்கள்'' -அமைச்சர் பேச்சு, திமுகவினர் கொந்தளிப்பு

மதுரை உத்தங்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிய அமைச்சர் பி. மூர்த்தி பேசும்போது,"மதுரை மாவட்டத... மேலும் பார்க்க

War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?

கத்தார் மீது தாக்குதல்:இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தாரும், எகிப்தும் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவிடம் தனியாக ஆலோசனை நடத்திய இபிஎஸ்; டெல்லி சந்திப்பில் பேசப்பட்டவை இதுதானா?

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லிக்கு... மேலும் பார்க்க

மதுரை: `செல்லாக்காசுகளின் சலசலப்பால் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது' - ஆர்.பி.உதயகுமார்

'பிரிந்துள்ள கட்சியினரை ஒன்றிணைக்க வேண்டும்' என்று அமித் ஷா மூலம் செங்கோட்டையன் வலியுறுத்தியும், 'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது' என்று டிடிவி தினகரனும் நெருக்கடி கொடுத்... மேலும் பார்க்க