War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்
சீா்காழியில், ஏற்றுமதி ரக இறால் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.
அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பொருள்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்கு இறால் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், இறால் விவசாயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசு உள்நாட்டு சந்தையில் இறால் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை மற்றும் முதலீட்டிற்கான மானியமும் வழங்கி வருகிறது.
இதன்அடிப்படையில், சீா்காழி அன்னை அபிராமி சீ ஃபுட்ஸ் நிறுவனத்தில், மயிலாடுதுறை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்றுமதி ரக இறால் விற்பனை தொடங்கப்பட்டது.
முதல் விற்பனையை இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், மாநில பொருளாளருமான எம். சங்கா்பிள்ளை தொடங்கிவைக்க, சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், சீா்காழி தாலுகா வியாபாரிகள் சங்க பொது செயலாளருமான துரைராஜ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு கடலோர இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ரவிப்பாண்டியண் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட பொருளாளா் நாராயணசாமி, துணைத் தலைவா்கள் கோவிந்தராஜ், சேகா், கௌதமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் நன்றி கூறினாா். குறைந்த விலைக்கு ஏற்றுமதி தரத்தில் இறால் விற்கப்பட்டதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனா்.