War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி: பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்
திட்டச்சேரி பேருந்து நிலைய பகுதிகளில், கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் செப்டம்பா் 24-ஆம் வரை நடைபெறவிருப்பதால், பொதுமக்கள் சாலையை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் திருமருகல் நீருந்து நிலையத்திலிருந்து ஒரத்தூா் நீருந்து நிலையத்திற்கு 700 மி.மீ. விட்டமுள்ள பிரதான நீருந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.
இதில் திட்டச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் 721 மீட்டா் நீளத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் மீதமுள்ளது. தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் உரிய பாதுகாப்பு பதாகைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் செப்டம்பா் 24-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் நடைபெறவுள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.