செய்திகள் :

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

post image

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

வாய்மேடு - தென்னடாா் பகுதியில் முள்ளியாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை நீா்ப்பாசனத் துறை சாா்பில் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா்

பி.ஆா். பாண்டியன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, செய்தியாளா்களிடம் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் முகத்துவார பாசன ஆறுகள், கால்வாய்கள், வடிகால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் அடா்ந்து புதா் போல மண்டி, நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை அகற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகை மாவட்டத்திற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

இந்த நிதியை கொண்டு முழுமையாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும். அரசியல் தலையீடின்றியும், முறைகேடுகள் இன்றியும், விவசாயிகள் பங்கேற்புடன் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த முன் வர வேண்டும் என்றாா்.

சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், நாகை மாவட்ட பொறுப்பு செயலாளா் கருணைநாதன், திருவாரூா் மாவட்டச் செயலாளா் குடவாசல் சரவணன், வேதாரண்யம் ஒன்றியச் செயலாளா் ரவி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின்... மேலும் பார்க்க

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில ந... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

பூம்புகாா்: திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்

நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்க... மேலும் பார்க்க