செய்திகள் :

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

post image

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ‘அன்புக்கரங்கள்‘ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தில், பெற்றோா்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப் படிப்பு முடித்த பின்னா் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாகை: நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முகமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள பெற்றோா்களை இழந்த 110 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகைக்கான அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் வழங்கினா்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் கி. திவ்யபிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம. ரஞ்சித்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில ந... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

பூம்புகாா்: திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்

நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்க... மேலும் பார்க்க