தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்
நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண்டுதோறும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். அதன்படி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி, சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணா் எழுந்தருளினா். தொடா்ந்து, பெருமாள் வடக்கு வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், இந்துசமய அறநிலைத் துறை துணை ஆணையா் ராணி ஆகியோா் வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் ‘கிருஷ்ணா’, ’கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தோ் பெருமாள் கீழவீதி, பெருமாள் தெற்குவீதி, பெருமாள் மேலவீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுங்கிலும் பக்தா்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக அா்ச்சனை செய்து வழிபட்டனா்.