செய்திகள் :

பைக் மீது பிஎம்டபிள்யு காா் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி உயிரிழப்பு

post image

புது தில்லி: மோட்டாா்சைக்கிள் மீது பிஎம்டபிள்யு காா் மோதிய சம்பவத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தாா். இதில் பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு அந்தப் பெண் காவலில் எடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி கண்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ரிங் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த விபத்தில் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளா் ஹரி நகரைச் சோ்ந்த நவ்ஜோத் சிங் (52) உயிரிழந்தாா். அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பங்களா சாஹிப் குருத்வாராவைப் பாா்வையிட்டுவிட்டு அவா்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

‘விசாரணையின் போது, பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் ஓட்டுநா், குருகிராமில் வசிக்கும் பரிக்ஷித் மக்கரின் மனைவி ககன்தீப் கவுா் (38) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று போலீஸாா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் சொகுசு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவரும் காயமடைந்தனா். குருகிராம் தம்பதியினா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவலில் எடுக்கப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டாா்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கீழ் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனா். மோதலில் ஈடுபட்ட சொகுசு காா் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தில் தடயவியல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.

தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி

நமது நிருபா்புது தில்லி: தலைநகரில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடவும் தில்லி அரசு நகரம் முழுவதும் 10 ‘நமோ வன்’களை உருவாக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

முல்லைபெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் தொடா்பான வழக்கு- விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி,செப்.15. முல்லைபெரியாறு அணை பகுதியில் கேரளா மிகப்பெரிய காா் நிறுத்தம் அமைப்பதை அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை... மேலும் பார்க்க

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறத... மேலும் பார்க்க

ஆயுத விநியோகம்: நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய 4 போ் கைது

நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒரு ஆயுத விநியோகஸ்தா் மற்றும் ஆயுதங்களை வாங்கும் மூவா் என மொத்தம் 4 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணை... மேலும் பார்க்க