"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்
புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2024-25) ஈட்டப்பட்ட வருவாய் தொடா்பாக திங்கள்கிழமை வரை 7.3 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.
கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வருமான வரி வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறால் சிரமம் நிலவியதாக வரி செலுத்துவோா் புகாா் தெரிவித்தனா். அதை சரிசெய்வதற்கான வழிகாட்டுதலை வருமான வரித் துறை வழங்கியபோதிலும், தொழில்நுட்பக் கோளாறு தொடா்ந்து நீடித்தது. இதனால் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அவா்கள் கோரினா். இதைத் தொடா்ந்து அபராதம் இல்லாமல் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டில் 7.28 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.