செய்திகள் :

"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்

post image

"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி 2.0...
ஜி.எஸ்.டி 2.0...

பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக-வின் பூத் கமிட்டி மாநில மாநாடு வருகின்ற 21 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

1947 முதல் தற்போது வரை உயர்த்திய வரியைக் குறைத்தாக சரித்திரம் இல்லை, ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் மட்டும் முடிவெடுக்க மாட்டார், எல்லா மாநில நிதியமைச்சர்களும் முடிவெடுப்பார்கள்.

ஜிஎஸ்டி வரிக்கு மத்திய அரசுதான் காரணம் எனத் தமிழக மக்களிடம் மாயயை உருவாக்கி வைத்திருந்தனர். 18 சதவிகிதமாக இருந்த வரி தற்போது 5 சதவிதமாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவிகிதம் தொழில்துறையினர் பயன் பெறுவார்கள்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பதை மக்களுக்கு தீபாவளி பரிசாக நிதியமைச்சர், பிரதமர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்க மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்பதைப் போல மத்திய அரசு எதைச் செய்தாலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்கும் எண்ணம் இல்லை.

தேர்தல் வருவதால் ஜிஎஸ்டியைப் போல் தமிழகத்தில் உயர்த்திய சொத்து வரி, மின்சார கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்கும் என நினைக்கிறேன்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். அமித்ஷா யாரை முதலமைச்சர் வேட்பாளராகச் சொல்கிறாரோ அவரை வெற்றி பெற வைக்க வேலை செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். தற்போது முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்கிறார். வரும் காலங்களில் என்ன கூறுகிறார் என்பதையும் பார்ப்போம்.

2026 தேர்தல் பாஜக-வுக்கு இலக்கு அல்ல என்ற ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும். 2029 ல் நாடாளுமன்றத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாகச் செல்ல வேண்டும்.

அமித்ஷா சென்னைக்கு வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அறிவித்தார், அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித்ஷாவைச் சந்தித்து வருகிறார்கள். திமுகவில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கவில்லை. திமுகவில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி எனப் பதவி வகித்தால் எப்படி ஜனநாயகம் இருக்கும்?

தேர்தல்களில் தில்லுமுல்லு செய்திருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளன என விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்குச் செலவைக் குறைக்கதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

5 வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் அதிகம் செலவாகிறது. அதைக் குறைக்கதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதி நூலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யைப் படித்து பார்க்கச் சொல்லுங்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தத... மேலும் பார்க்க

"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடியாது"-துரை வைகோ

ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங... மேலும் பார்க்க

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.அந்தக் கடைசி நாளான ந... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை' - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. புதிதாக வரும் ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!' - பொன்னார் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போ... மேலும் பார்க்க