Chennai Rain: இரவு முழுவதும் இடி, மின்னல்; "அடுத்த மூன்று நாட்களுக்கு" - பிரதீப்...
"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஆனால், தற்போது மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும், சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் புதுக்கோட்டை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் காற்றுதான் வருகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அடியோடு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களோடு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய தி.மு.க-வினர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்?
தமிழகம் முழுவதும் போதைப் பொருள், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை செய்து வருகிறார். ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை நடத்தி மக்களை தி.மு.க அரசு ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. எனவே, எத்தனை கோடி ரூபாயைக் கொடுத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி" என்றார்.