"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
அதிசார குருப்பெயர்ச்சி: தனுசு ராசிபலன்கள்!
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும், தனது இலக்கிலிருந்து மாறாத தன்மைகொண்ட தனுசு ராசிக்காரர்களுக்குத் தற்போது குருபகவான் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

என்றாலும் எல்லோரும் சொல்வதுபோல், கேந்திரத்தில் அமர்ந்த குரு, உங்களுக்குப் பெரிய நன்மைகள் எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்டோபர் 18-ம் தேதி முதல், அவர் 8-ம் வீட்டில் அதிசாரமாக அடியெடுத்து வைத்து 48 நாள்கள் அங்கு அமர்ந்து பலன் தரப்போகிறார்.
ராசிநாதன் அஷ்டமத்தில் மறைவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்குமோ என்று அஞ்சவேண்டாம். உங்கள் ராசிநாதன் கடகத்தில் உச்சம் அடைகிறார் என்பதை மறக்க வேண்டாம். அதிசாரத்தில் உச்சமடைவதால் திடீர் யோக அமைப்புகளை உங்களுக்கு குருபகவான் தருவார்.
எட்டாம் இடம் சுபத்துவம் அடைவதால் வெளிநாடு, வெளிமாநில வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல செய்தி கிடைக் கும். பயணங்கள் அதிகரிக்கும். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும். என்றாலும் ஆரோக்கியத் தில் அக்கறை காட்டுவது நல்லது. இரவில் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போடவேண்டாம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் பேச்சில் இனிமை கூடும். பல காலமாக முடியாத விஷயங்களைக் கூட, அதிசார குரு காலகட்டத்தில் பேசியே சாதிப்பீர்கள். பேச்சால் புதிய நட்புகளை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், இதுவரையிலும் ஏதேனும் காரணங்களால் நின்றுபோன வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த அப்ரூவல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பட்ஜெட்டுக்குத் தகுந்த சொத்து அமைய வாய்ப்பு உண்டு. வீடு கட்ட எதிர்பார்த்த வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும்.
தாயார் வழியில் எதிர்பாராத நன்மைகள் நடக்க வாய்ப்பு உண்டு. தாய் வழியில் இருந்துவந்த தொல்லைகளும் விலகும். உங்களில் பலர் வண்டி - வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் விலகி, உங்கள் கைக்கு வந்து சேர வாய்ப்புகள் உண்டாகும்.
12-ம் வீட்டை குருபார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் நீண்ட நாள்களாகச் செல்ல நினைத்த கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவருவீர்கள். புண்ணிய யாத்திரைகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் மனதில் எண்ணியிருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபாடு உண்டாகும். நிம்மதியான தூக்கம் வரும்!
மொத்தத்தில் இந்த அதிசார குருப்பெயர்ச்சி பூராட நட்சத்திரக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை வழங்கும். மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
பரிகாரம்: நவகிரக குருவுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங் கள். வாய்ப்பிருப்பவர்கள், அருகிலிருக்கும் குரு ஸ்தலத்துக்கு சென்று வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள். குருபகவான் நற்பலன்களை அள்ளிக்கொடுப்பார்.