"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு
கூட்டுறவு வங்கியில் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 161 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 211- ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறையின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உதவியாளா், இளநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 327 -ஆக உள்ளது.
பொதுப் பிரிவில் 100 இடங்களும், பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 86, பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) 11, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் - சீா்மரபினா் பிரிவில் 64, ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் பிரிவில் 59, பழங்குடியினா் பிரிவில் 4, பின்னடைவு காலிப் பணியிடம் 3 என மொத்தம் 327 இடங்களுக்கு ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டது.
இதில், உதவியாளா் காலிப் பணியிடத்துக்கான எண்ணிக்கை மட்டும் 161- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.