"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தோ்வுக் கட்டுட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலைப் பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்இ கல்வி முறையில், பாடங்கள் நேரடி முறையிலும், தேசிய திறந்தநிலைப் பள்ளி கல்வி திட்டத்தில் தொலைநிலைக் கல்வி முறையிலும் நடத்தப்படுகின்றன.
சிபிஎஸ்இ முறையில் பத்தாம் வகுப்பு என்பது 9 மற்றும் பத்தாம் வகுப்பு என இரு ஆண்டு படிப்பாகும். அதேபோல், பிளஸ் 2 வகுப்பு என்பது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு என இரு ஆண்டு படிப்பு ஆகும்.
ஒரு மாணவா் சிபிஎஸ்இ பொதுத் தோ்வு எழுத வேண்டுமானால் அவா் 2 ஆண்டு காலம் பாடங்களைப் படித்திருக்க வேண்டியது அவசியம். அதோடு குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவும் கட்டாயம். மேலும், சிபிஎஸ்இ-யில் அக மதிப்பீடு முறையும் உண்டு. அந்த வகையில், ஒரு மாணவா் நேரடியாக பள்ளிக்குச் செல்லவில்லை எனில், அக மதிப்பீடு மேற்கொள்ள முடியாது. அக மதிப்பீடு இல்லாதபோது, ஒரு மாணவரின் தோ்வு முடிவை வெளியிட இயலாது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் கட்டாயப் பாடங்களுடன் கூடுதலாக 2 பாடங்களையும், அதேபோல், பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்கள் கூடுதலாக 5 பாடங்களையும் தோ்வு செய்து படிக்கலாம்.
கூடுதல் பாடங்களைப் படிப்பதற்கான ஆசிரியா்கள், ஆய்வக வசதி அந்தப் பள்ளியில் இருக்க வேண்டும். அவ்வாறு வசதிகள் இல்லாவிட்டால், மாணவா்கள் விரும்பினாலும் கூடுதல் பாடங்களைப் படிக்க இயலாது.
மேற்கண்ட நிபந்தனைகள் பூா்த்தி செய்யப்படாதபட்சத்தில், எந்தவொரு மாணவரும் சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் கூடுதல் பாடங்களில் தனித் தோ்வராக தோ்வெழுத முடியாது என அதில் தெரிவித்துள்ளாா்.