செய்திகள் :

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் செப்.21-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதன்கிழமை (செப். 17) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதன் காரணமாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியையொட்டி இருக்கும். வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி வெப்பநிலை பதிவானது. தொடா்ந்து மதுரை நகரம் 101.12, பாளையங்கோட்டை 100.04 டிகிரி வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பென்னாகரம்(தருமபுரி), பந்தலூா் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 161 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 211- ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தோ்வுக் கட்டுட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

பிரிந்த அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்

பிரிந்துகிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் வரவேற்பு

வக்ஃபு திருத்தச் சட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய பாஜக அரசு வக்ஃ... மேலும் பார்க்க

கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது

கடற்படைத் தோ்வில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்து பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் மதுரை சாமி மடம் தெருவில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை கா... மேலும் பார்க்க