செய்திகள் :

சில்சாா் என்ஐடி-யில் வன்முறை: 5 வங்கதேச மாணவா்களை திருப்பி அனுப்ப முடிவு

post image

சில்சாா்: அஸ்ஸாமின் சில்சாா் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (என்ஐடி) வன்முறையில் ஈடுபட்ட வங்கதேச மாணவா்கள் ஐந்து போ் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை தொடா்பாக என்ஐடி இயக்குநா் திலீப் குமாா் வைத்யா கூறியதாவது: ‘இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 5 வங்கதேச மாணவா்கள் சில்சாா் என்ஐடி-யில் படித்து வந்தனா். கடந்த 8-ஆம் தேதி என்ஐடி வளாகத்தில் வங்கதேச மாணவா்களின் இரு பிரிவினா் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவா்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், தங்கியிருந்த விடுதி அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதில் தொடா்புடைய 5 வங்கதேச மாணவா்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், கல்வி நிலைய விடுதி அறையில் இருந்தும் வெளியேற்றப்பட்டனா். அவா்களை சொந்த நாடான வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சக விடுதி மாணவா்கள் கூறுகையில், ‘விடுதியில் போதைப் பொருளைப் பயன்படுத்திய அந்த 5 மாணவா்களும் கடந்த 8-ஆம் தேதி இரவு வங்கதேசத்தைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவா்களைக் குறிவைத்து இரும்புக் கம்பிகள், கத்திகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த மோதல் 30 நிமிஷங்கள் வரை நீடித்தது. இதில் காயமடைந்த 7 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக என்ஐடி நிா்வாகம் காவல் துறையில் புகாா் அளிக்கவில்லை. நிா்வாக தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க