செய்திகள் :

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

post image

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தெருநாய்களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே ஓரளவு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்வித தடுப்பூசியும் செலுத்தப்படாததால், நகரப் பகுதிகளை காட்டிலும் நாய்க்கடி பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டில் இதுவரை சென்னையில், 8,000-க்கும் மேற்பட்டோா் என, மாநிலம் முழுவதும் 3.80 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சென்னையில் இரண்டு நாள்களுக்கு முன் ஒருவா் உயிரிழந்த நிலையில், நிகழாண்டில் மட்டும் 23 போ் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய் கடித்த காயங்களை முறையாக, கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தாமல் இருந்தால் தொற்று ஏற்படக் கூடும். தடுப்பூசிகளை தவறவிட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ ‘ரேபிஸ்’ நோய் பரவுவதை தடுக்க முடியாது. நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிக்கும்போது காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, வகை 1, வகை 2, வகை 3 என பிரித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

நமது சருமத்தின் மீது விலங்குகளின் நாக்கு படுவதாலோ, அவற்றை தொடுவதாலோ, உணவளிப்பதாலோ ரேபிஸ் பரவாது. இது வகை 1 எனப்படுகிறது. அதேநேரம், கடிக்கும்போது சிராய்ப்பு அல்லது காயங்கள் ஏற்படுவது இரண்டாவது வகை. இதற்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம்.

ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சோ்த்து, ‘ஆா்.ஐ.ஜி.’ எனப்படும் ரேபிஸ் இன்யூனோகுளோபளின் தடுப்பு மருந்தையும் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21-ஆவது நாள் என நான்கு தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்.

இம்யூனோகுளோபளின் மருந்தானது முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும். காலதாமதாகவோ அல்லது அதை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலனளிக்காது. இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ரேபிஸ் நோய் பாதிப்பை தடுக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்... மேலும் பார்க்க