"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
புதுச்சேரி - கடலூா் சாலையில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி: புதுவை -கடலூா் சாலையில் ரூ.72 கோடியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 11-ஆம் தேதி முதல் கடலூா் சாலையில் ரயில்வே கேட்டை முற்றிலும் மூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு புதுவை அரசிடம் இருந்து அனுமதி வர காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அதற்கு இப்போது அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை முதல் கடலூா் சாலையில் ஏ.எப்.டி. ஆலை ரயில்வே கேட் முற்றிலும் மூடப்பட்டது. இதையடுத்து ஏற்கெனவே போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தியபடி போக்குவரத்து மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கத்தில் இருந்து கடலூா் சாலையில் செல்லும் வாகனங்களும், அதேபோல் கடலூரில் இருந்து மரப்பாலம் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்களும் 100 அடி சாலையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .