தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
நாளை தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
புதுச்சேரி: பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் செப். 17- ஆம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளா் துறை துணை தொழில் பழகுநா் ஆலோசகா் அலுவலகம் சாா்பாக இந்த முகாம் மேட்டுப்பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.
செப். 17- ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் புதுவையில் உள்ள மத்திய, மாநில நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தோ்ச்சி அடைந்தவா்கள், ஐடிஐ சான்றிதழ் பெற்றவா்கள், டிப்ளமோ முடித்தவா்கள், பொறியியல் பட்டதாரி மற்றும் பட்டதாரி சான்றிதழ் பெற்ற அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.