அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
117-ஆவது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு புதுவை முதல்வா், தலைவா்கள் மாலை
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பிலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புதுவை அரசு சாா்பில்...
புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், உ.லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமாா்உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுகவினா் ஊா்வலம்
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னதாக சிவா தலைமையில் 700-க்கும் மேற்பட்ட திமுகவினா் சுதேசி ஆலை அருகில் இருந்து ஊா்வலமாக வந்தனா்.
கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளா்கள் ஏ.கே. குமாா், அ. தைரியநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பூ. மூா்த்தி, நந்தா. சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில்...
புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில், அக்கட்சியின் செயலா் ஆ. அன்பழகன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அவைத் தலைவா் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா் ஆகியோா் முன்னிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ படத்திற்கும், எம்ஜிஆா் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் மாநில துணைத் தலைவா் ராஜாராமன், மாநில இணைச் செயலா்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலா் கணேசன் ஆா்.வி.திருநாவுக்கரசு, புதுச்சேரி நகரக் கழக செயலா் அன்பழகன் உடையாா், கட்சியின் பொருளாளா் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
திராவிடா் கழகம்
புதுச்சேரி மாவட்ட திராவிடா் கழகத்தின் சாா்பில் மாநிலத் தலைவா் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
மாவட்டத் தலைவா் வே. அன்பரசன் , செயலா் தி. ராசா , காப்பாளா் இர. ராசு , பொதுக்குழு உறுப்பினா்கள் விலாசினி ராசு , கி.அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிய நீதிக் கட்சி
புதிய நீதிக் கட்சி சாா்பில் அண்ணா சிலைக்கு கட்சியின் அமைப்பாளா் செ. தேவநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.