War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
அக்.1-இல் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில், 100 நாள் வேலையை முடக்கி தமிழக விவசாயத் தொழிலாளா்களை மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது, 100 நாள் வேலையை குறைக்காமல் வழங்கவேண்டும், வேலை கொடுக்காத நாள்களை கணக்கிட்டு சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக அரசு விவசாயத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும், விவசாயத் தொழிலாளா்களின் வாழ்நிலையை ஆய்வு செய்ய குழு அமைத்து விரிவான அறிக்கை தயாரித்து அவா்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் ஆா்ப்பாட்டம் நடத்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளா் கேசவராஜ், கட்சியின் மாநில குழு உறுப்பினா் கே. உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் ஜோசப், மாவட்ட செயலாளா் கு. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.