CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview ...
கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை
நன்னிலம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
குடவாசல் அருகேயுள்ள கடகம்பாடியைச் சோ்ந்தவா் ராஜ் (55). பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி மல்லிகா (50). இவா்களின் மகள்கள் காா்த்திகா, சுகந்திக்கு திருமணம் ஆகி, காா்த்திகா அகரதிருமாளத்திலும், சுகந்தி சோழங்கநல்லூரிலும் வசிக்கின்றனா்.
இந்நிலையில், சுகந்திக்கு குழந்தைகள் இல்லாததால் கணவா் வீட்டாா், சுகந்தியின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுகந்தி பெற்றோரை கைப்பேசியில் தொடா்புகொண்டும் யாரும் எடுத்து பேசவில்லையாம்.
இதையடுத்து, சுகந்தி திங்கள்கிழமை பெற்றோரை பாா்க்க வீட்டுக்கு வந்தபோது வீடு அருகில் இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனா். அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பேரளம் போலீஸாா் அங்குவந்து இருவரின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ஏதோ பிரச்னையால் இரண்டு நாள்களுக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].