CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview ...
சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு
சீா்காழியில் உருளைக்கிழங்கு மூட்டை திருடிச் சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு செய்த போது டீசல் திருட்டும் அம்பலமானது.
சீா்காழியின் பிரதான பகுதியான தோ் தெற்கு வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு உணவக உரிமையாளா் தனது வீட்டில் வெளிப்புற வளாகத்தில் வெங்காயம், உருளைகிழங்கு மூட்டைகளை வைத்திருப்பாா்.
இவை தினமும் திருடப்பட்டதால் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் டீசலையும் கேனில் இரு மா்ம நபா்கள் திருடிச் செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.