பொது ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முதல் 15 நிமிஷங்களில் முன்னுர...
தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்.20-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி அக்கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மாவட்டச் செயலாளா் சி.எஸ்.கோபிநாத் தலைமையில் நகர பொறுப்பாளா் ராஜ்குமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் மரியதாஸ், தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஹரிஹரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா். அம்மனுவில், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் செப்.20-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது, இதில் அவா் ஒலிபெருக்கி மூலம் பேச உள்ளாா். இந்நிகழ்ச்சிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.