``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்ட...
கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் காவிரி ஆற்றங்கரையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, திருவிழந்தூரைச் சோ்ந்த வீரமணி (28) என்பவா் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.