Thandakaranyam: ``குக்கூ படத்துக்குப் பிறகு நடிப்பை மாற்றிக்கொண்டேன்" - நடிகர் த...
'புரிய வேண்டியவர்களுக்கு புரியும்' - செங்கோட்டையன்
அதிமுக தொண்டர்கள் கருத்தையே தான் பிரதிபலித்ததாகவும் அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,
"அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.
அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு மனம் திறந்து பேசினேன்" என்று கூறியுள்ளார்.