செய்திகள் :

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ். விஜயபிரகாஷ் தயாரிக்க, நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய இந்தப் படத்துக்கு, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் செப். 19 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

The OTT release date of Sivakarthikeyan Housemates has been announced.

மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!

நடிகர் ஓவன் கூப்பர் மிகக்குறைந்த வயதிலேயே எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் தி அடோலசென்ஸ். குழந்தை வளர்ப்பு மற்றும் இன்றைய ... மேலும் பார்க்க

பைசன் அப்டேட்!

பைசன் படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.நாயகனாக துருவ் வ... மேலும் பார்க்க

ஆத்மாவே போ... சூ ஃப்ரம் சோ - திரை விமர்சனம்!

கன்னடத்தில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சூ ஃப்ரம் சோ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மங்களூருவிலுள்ள கிராமம் ஒன்றில் கதைநாயகன் ரவியண்ணா (சனில் கௌதம்) மற்றும் அவர... மேலும் பார்க்க

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மினாக்‌ஷி, ஜாஸ்மின் சாம்பியன்!

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் தங்கம் வென்ற உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனா். உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில்... மேலும் பார்க்க

லக்‌ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி!

ஹாங்காங் ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனா். சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்று வரும் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி சீனா சாம்பியன்!

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளி வென்றது. சீனாவின் ஹாங்ஸு நகரில் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அ... மேலும் பார்க்க