ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர...
ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராகப் பேசினார்.
அடுத்த நாளே கட்சியின் பொறுப்புகளிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கினார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது.
அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
செங்கோட்டையனை பொறுப்பிலிருந்து நீக்கியதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுக பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பி விலகி வருகின்றனர்.
இதுவரை ஈரோடு அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2000 பேர் விலகியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி பயணம், அமித் ஷா சந்திப்பெல்லாம் அடுத்தடுத்து அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று, செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் செங்கோட்டையன்,
"அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி ஓ.பன்னீர்செல்வம்,
"பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்போம்.
தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவைக் காப்பாற்றுவார்கள்" - அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியபின் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs