பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் உறுதியாக சொல்கிறேன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பிடிக்கின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும்.
நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். அதற்கான அர்த்தத்தை மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை” என அவர் தெரிவித்தார்.
பத்து நாள்கள் செங்கோட்டையன் கெடு விதித்தது தொடர்பான கேள்விக்கு, ”அது செங்கோட்டையன் விவகாரம், அதற்கு பதில் அவரே தருவார்” என்றார்.
இபிஸ்ஸின் தில்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, ”தில்லி செல்வது, அவருடைய விஷயம். அவர் செல்கிறார்” என்றார்.
இதையும் படிக்க: வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!