செய்திகள் :

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

post image

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

முதல்வரின் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆட்டோ பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

Higher Education Minister Kovi Cheliyan has announced that the deadline for applying for B.Ed. and M.Ed. student admissions has been extended.

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மா... மேலும் பார்க்க

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா... மேலும் பார்க்க

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ம... மேலும் பார்க்க