செய்திகள் :

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

post image

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.

அன்புமணி பதிலளிக்காததால், அவரைக் கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.

இந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பு வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் பாமகவில் இருந்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டன.

வரும் 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பாமக தலைவராக, அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தை, பாமகவின் தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள்தான் பாமகவின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முடியும்.

ராமதாஸ் அவர்கள்தான் நிறுவனர். அவர் வழியில் அன்புமணி பயணித்து வருகிறார்” என்றார்.

இதையும் படிக்க: அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்..! - ஓபிஎஸ் பேட்டி

Anbumani's lawyer Balu has stated that the Election Commission has recognized Anbumani as the PMK leader.

வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். ... மேலும் பார்க்க

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மா... மேலும் பார்க்க

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா... மேலும் பார்க்க

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க