தண்டகாரண்யம்: "கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம்" -...
விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்
எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அடுத்த ஆண்டு அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும். பல்வேறு சோதனைகளைக் கடந்து, சாதனைச் சரித்திரம் படைத்திருக்கும் அதிமுக, மக்களை நேசிக்கிறது. மக்கள் அதிமுகவை நேசிக்கிறார்கள்.
மக்களுக்கு திமுக மீது வெறுப்பு, அதிருப்தி இருக்கிறது. இதற்கு மாற்று அதிமுகதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.
எம்ஜிஆருக்கு கூடிய கூட்டத்தைப் போல, விஜய்க்கும் கூட்டம் வருவதாக பேசப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எம்ஜிஆர் ஒரு மகத்தான மனிதர். அவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம்" என்று கூறினார்.
Former AIADMK Minister C. Vijayabaskar says that Don't compare Vijay with MGR
இதையும் படிக்க | அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்..! - ஓபிஎஸ் பேட்டி