Singer Sathyan: "குழிதோண்டிப் புதைப்பது மாதிரியான செயல்; தயவுசெய்து செய்யாதீர்" ...
Idly Kadai: "தனுஷுக்குத் துரோகம் செய்யும் நான்கு பேர்" - ஜி.வி.பிரகாஷ் சொல்வது என்ன?
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

'இட்லி கடை' படக்குழு அனைவரும் இந்தப் பிரமாண்ட நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
'இட்லி கடை' திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் ரெட் கார்பெட்டில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், "'இட்லி கடை' திரைப்படம் மண் வாசனையைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கும்.
'அசுரன்' திரைப்படத்திற்குப் பிறகு நான் இசையமைக்கும் ஃபோக் (Folk) ஜானர் திரைப்படம் இது.
இப்படத்திற்கும் கதைக்கும் மிகவும் உண்மையான பாடல்களைக் கொண்டு வந்திருக்கிறோம். படத்துடன் அந்தப் பாடல்களையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

படம் பார்க்கும்போது ஊருக்குச் சென்று வந்தது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, படத்திற்குள் பல எமோஷன்களும் அடங்கியிருக்கின்றன" என்றவர் இசை வெளியீட்டு விழா மேடையில், "'ராயன்' திரைப்படத்தில் தனுஷ், சகோதரர்களில் ஒருவராக என்னை நடிக்கக் கேட்டார்.
ஆனால், அக்கதாபாத்திரம் அவருக்குத் துரோகம் செய்யும் வகையில் இருந்தது. திரைப்படத்தில்கூட நான் என் நண்பனுக்கு துரோகம் செய்யமாட்டேன்.
அவருக்குத் துரோகம் செய்யும் 4 பேர்களில் நான் எப்போதும் இருக்கமாட்டேன்" எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...