விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்;...
Idly Kadai: ``உங்களால வளர்ந்தவங்க நேருக்கு நேர் மோதினால்...." - தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

`இட்லி கடை' படக்குழு அனைவரும் இந்த பிரமாண்ட நிகழ்வில் கலந்துக் கொண்டு திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.
தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் பேசுகையில், "பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று, உழைத்து, இரத்தம், வியர்வை சிந்தி உழைத்து உச்சத்திற்குச் செல்வது.
உச்சத்தில் இருப்பவனை அடித்து முன்னேறுவது இரண்டாவது வழி." என்றவர் தனுஷை நோக்கி, "உங்களால் வளர்ந்தவர்கள், நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நேருக்கு நேர் நடித்து மோதினால் ஓகே!

ஆனால், ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி உட்கார்ந்து பேசுகிறார்கள். தனுஷ் சார், உங்கள் தலைவர் சொன்னது போல, நல்லவனாக இருங்கள்.
ஆனால், ரொம்ப நல்லவனாக இருக்காதீர்கள். நீங்கள் அனைத்து 'வுட்'களிலும் படம் செய்துவிட்டீர்கள். நடித்தால் மட்டும் போதாது. பி.ஆர். செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...