திருமலை திருப்பதி: 'ஆனந்தமும் ஆன்மீகமும் சேரும் புனிதத் தலம்' | Photo Album
ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை 8 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது. சித்திபேட்டையில் உள்ள நாராயண்ராவ்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 245.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்டியன்னாரம் பகுதியில் 128 மிமீ, முஷீராபாத் பகுதியில் 114.5 மிமீ மழையும் பெய்துள்ளது.
தெலங்கானாவில் இந்த கனமழையால் அங்குள்ள சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியும் போக்குவரத்து காவல்துறையினரும் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் அதிமுகள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பர்சிகுட்டாவில் வடிகால் சுவர் இடிந்து விழுந்ததில், 2 குழந்தைகளுக்குத் தந்தையான சன்னி என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல நம்பள்ளி பகுதியில் அர்ஜுன்(26), ராமா(28) ஆகிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்குள்ள பல கடைகளில் வெள்ளம் புகுந்து பொருள்கள் சேதமாகியுள்ளன. மிகவும் மோசமான வடிகால் அமைப்பு முறையே இவ்வளவு பாதிப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முன்னதாக தெலங்கானாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hyderabad roads turn into rivers, traffic crawls amid heavy rain; 3 missing
இதையும் படிக்க | வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!