``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்ட...
வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) நிறைவடைகிறது.
அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீர்த்து வருகிறது.
2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், செப். 15 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருமான வரி கணக்கை இன்று தாக்கல் செய்யவில்லையெனில், வருமானத்திற்கு அபராதம் வசூலிக்கப்படும்.
இதையும் படிக்க: ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!