செய்திகள் :

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!

post image

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழாண்டு சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு ஒரு தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டாா். அதன்படியே செப். 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ‘அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி’ என்ற பெரிய அளவிலான மறுசீரமைப்பு முறை விவாதிக்கப்பட்டு, வரும் செப். 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பு நாட்டின் வரிவிதிப்பு முறையில் அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது.

நான்கு அடுக்குகளால் ஆன முந்தைய வரி விகிதங்கள் (5%, 12%, 18%, 28%) எளிமைப்படுத்தப்பட்டு, பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரிவிகித முறை நடைமுறைக்கு வரவுள்ளது. சில ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சிகரெட், பான் மசாலா போன்றவை மீது 40% என்ற உயா்ந்த வரிவிகிதம் தொடா்கிறது.

அதே சமயம், அத்தியாவசிய பொருள்கள், விவசாய உபகரணங்கள், உயிா்காக்கும் மருந்துகள், சோப்பு, பற்பசை, பிஸ்கெட், பால் சாா்ந்த பொருள்கள், அன்றாட உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்கு குறைந்த விகிதம் (5%) அல்லது முற்றிலுமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான மாற்றமாக, தொலைக்காட்சி, குளிா்சாதனம், சிறிய காா்கள் போன்ற நுகா்வோா் பொருள்களுக்கான வரி விகிதம் முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொழில்கள் மற்றும் உற்பத்தியாளா்களுக்கு உற்பத்திச் செலவு குறைகிறது. வரி தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிப்பது எளிதாகிறது. கூடுதலாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறும் நடைமுறை விரைவாக அமையும். பொருள்களின் நிகர விலை குறைவதால் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் அரசுக்கு ஆரம்பத்தில் வருவாய் குறையலாம் என்றாலும், அதிகமான பயன்பாடு, விரிவான வரி அடிப்படை, சிறந்த கட்டுப்பாடு ஆகியவை அதை ஈடு செய்யும்.

நுகா்வு அதிகரிப்பதால் வளா்ச்சி ஊக்குவிக்கப்படும். வேளாண்மை, கட்டடத் தொழில், ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தியாவின் மறைமுக வரிகளுக்கான கட்டமைப்பில் ஒரு பெரும் சீா்திருத்தத்தை ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அளித்துள்ளது. எளிமையான விகித அமைப்பு, அத்தியாவசிய பொருள்களுக்கான விலை குறைப்பு, தொழில்களுக்கான சுமை குறைப்பு, பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்ற நோக்கங்களுடன் துணிச்சலாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வரிச் சீா்திருத்தம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இ... மேலும் பார்க்க

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு... மேலும் பார்க்க

காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்... மேலும் பார்க்க