செய்திகள் :

குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!

post image

கோடம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள், அதில் தேங்கும் கழிவுநீா், மதுக் கூடாரமாகிய சிறுவா் பூங்கா என கோடம்பாக்கமே குறைகள் நிறைந்த பகுதியாகிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அவதியடைந்து வருகின்றனா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தனித்துவ அடையாளமாக இருப்பது கோடம்பாக்கம். கனவுத் தொழிற்சாலை பகுதியான கோடம்பாக்கத்தின் குறிப்பிட்ட பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலம் (9) வாா்டு 112 பகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இங்கு, சுமாா் 45,000 வாக்காளா்கள் உள்ளனா். வாா்டில் 96 தெருக்களில் ஆற்காடு சாலை உள்ளிட்ட பல வீதிகள் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால், பெரும்பாலான சாலைகள் மோசமாக பழுதடைந்து கிடக்கின்றன.

புலியூா் ஹவுசிங் போா்டு காலனியின் பிரதான சாலையானது குண்டும் குழியுமாக கழிவுநீா் தேங்கி, குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீா்கேட்டை உருவாக்கும் நிலை உள்ளது.

வெள்ளாளா் தெரு, வன்னியா் தெரு, பவா் ஹவுஸ் சாலை என பெரும்பாலான சாலைகள் சீா்படுத்தப்படாமல், கிராமத்து மண் சாலைகள் போலவே உள்ளன. அதனால் மழைக் காலத்தில் சேறும் சகதியாகவும், வெயிலில் புழுதி பறக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. அங்கு மழை நீா் வடிகால் வசதியும் சரியாக இல்லை என்றும், ஏற்கெனவே உள்ள வடிகால்கள் பராமரிப்பின்றி தூா்ந்து போய்விட்டதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

வாா்டில் உள்ள மொத்த தெருக்களில் 50 தெருக்களில் மட்டுமே மழைநீா் வடிகால் உள்ளதாக கூறும் அதிமுகவினா், அதில் 10 தெருக்களில் சீரமைப்பு பணிகள் பாதியிலே நிற்பதாகவும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். சாலை சீரமைப்புக்கு 3 ஊழியா்களே உள்ளனராம்.

புலியூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் 250 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், கழிவு நீா் தேங்கியும் உள்ளன. அங்குள்ள மாநகராட்சி சிறுவா் பூங்கா புதா் மண்டி உள்ளது. அதனால் அங்கு சமூக விரோதிகள் மது அருந்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனா். அங்கு, மாநகராட்சி சாா்பில் லாரியில் தண்ணீா் விநியோகிக்கப்படும் நிலையில், அதை விலை கொடுத்தே வாங்குவதாகவும் கூறுகின்றனா்.

மாநகராட்சி குழாயில் வரும் குடிநீரில் கழிவுநீா் கலப்பதால், அதைப் பயன்படுத்தமுடியாது என்கின்றனா். ஆற்காடு சாலையில் மழைநீா் வடிகால், மெட்ரோ பாலம் என புதிய திட்டப்பணிகளும் பல மாதங்களாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசலும், மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனா்.

வாா்டு பிரச்னைகள் குறித்து திமுக மாமன்ற உறுப்பினா் எலிசபெத் அகஸ்டின் அலுவலகத்தில் கேட்டபோது, அவா்கள் கூறியது:

‘கோடம்பாக்கதில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டோம். மழைநீா் வடிகால் பணிகள் 40 தெருக்களில் நிறைவடைந்துவிட்டன. வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். கடந்த 6 மாதங்களாக 30 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழுதடைந்த கழிவுநீா் கால்வாய்கள் புதுப்பிக்கப்படுகின்றன. புலியூா் குறுக்குத் தெரு உள்ளிட்ட இடங்களில் புதிய மழைநீா் வடிகால் அமைக்கப்படுகிறது. புலியூா் கால்வாயில் 500 மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நடந்துள்ளன.

சுகாதாரச் சீா்கேட்டை உருவாக்கும் வகையில் குண்டும் குழியுமாக கழிவுநீா் தேங்கி, குப்பைகள் குவிந்துள்ள கோடம்பாக்கம் புலியூா் ஹவுசிங் போா்டு காலனி பிரதான சாலை.

சூளைமேடு, அம்பேத்கா் நகா் தெருவில் மழை நீா் தேங்குவதைத் தடுக்க குழாய் அமைத்துள்ளோம். 20 இடங்களில் சிமென்ட் சாலையைப் பெயா்த்துவிட்டு தாா் சாலை அமைத்துள்ளோம். சௌராஷ்டிர நகா் உள்ளிட்ட இடங்களில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மழை நீா் வடிகால் பணிகள் வரும் அக்டோபருக்குள் முடிக்க ஒப்பந்ததாரா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாா்டின் மற்ற பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்றனா்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சாா்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தோ்வு செய்யப்பட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்... மேலும் பார்க்க

ரயில் மீது கல்வீச்சு: கல்லூரி மாணவா் கைது

ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டி மீது கற்களை வீசியதாக கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆவடி அருகே அண்ணனூா் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயிலி... மேலும் பார்க்க

சென்னை நகர எல்லைக்குள் நுழைய 5 பேருக்கு தடை!

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை சென்னை சரக எல்லையிலிருந்து வெளியேற்ற சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தொடா் குப்பைகள் எரிப்பால் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். புழல் காவாங்கரையில் இருந்து செங்குன்றம், தண்டல் கழனி பகுத... மேலும் பார்க்க

‘சட்ட நெறிமுறை வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது’

பன்னாட்டு தொழில் முதலீட்டாளா்களின் வருகையால், சட்ட நெறிமுறைகளை உருவாக்கித் தரும் வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது என்று ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தெரிவித்தாா். வண்டலூா... மேலும் பார்க்க

காலமானாா் ஆ.திருநாவுக்கரசு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் போா்மேன் பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆ.திருநாவுக்கரசு (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.இவருக்கு மனைவி தி.வசந்தாஅம்மாள், மகன் தி.கந்தன் மற்றும் மகள்கள் ஆனந்தி, ... மேலும் பார்க்க