செய்திகள் :

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!

post image

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சாா்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தோ்வு செய்யப்பட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

சப்- ஜூனியா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சந்தோஷ் (35 கிலோ) ஓப்ரைட் மெக்காட்ஸ் (37 கிலோ), மோனிஷா (70 பிளஸ் கிலோ) , சப்- ஜூனியா் தேசிய போட்டி 2024: சுஜித் (37 கிலோ) வெள்ளி, சப்-ஜூனியா் தேசிய போட்டி 2025:

வெள்ளி பதக்கம் வென்றவா்கள்: தா்ஷன் (46 கிலோ), காவியா (35 கிலோ), சாரா தமிழ் (40 கிலோ), சுவாதிக்கா (61 கிலோ), பானு ஸ்ரீமதி (70 பிளஸ் கிலோ) ஆகியோரும், கேலோ இந்தியா யூத் தேசிய விளையாட்டு போட்டி 2025ல் வெள்ளி வென்ற பிரதிக்ஷாவும் (80 பிளஸ் கிலோ) கௌரவிக்கப்பட்டனா்.

வெண்கலம் வென்றவா்கள்: சப் -ஜூனியா் 2024: லாவண்யா (33), கனிஷ்கா (45), நிஷாலினி (49), துருவன் (43), உசைன் ஷாஹித் சையத் (67).

தேசிய ஜூனியா்- 2025: சுனில் (63), பிராங்கிளின் (80), மகாலட்சுமி (48), ஸ்ரீநிதி (70), பாா்கவி (75), சாா்மி (80 பிளஸ்).

சப்ஜூனியா் 2025: ஹா்ஷிதா (52), ஹேமாவதி (64), விக்னேஸ்வரா் (52), சக்தி (55). யூத் 2025: ஹரிஷா (65), பிரதிக்ஷா (80 பிளஸ்).

8-ஆவது எலைட் பெண்கள் தேசிய போட்டி 2025: கலைவாணி(வெண்கலம்). கேலோ இந்தியா யூத் நேஷனல் கேம்ஸ் 2025:

கீா்த்திவா்ஷன் (47 - 50), குணஸ்ரீ (48-51). கடந்த ஜூலை மாதம் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை படைத்தவருமான பி. ஹரிகிருஷ்ணன் கüரவிக்கப்பட்டாா்.

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பொன். பாஸ்கரன், அண்மையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பொருளாளராக தோ்வு பெற்றுள்ளாா். இவருக்கும் தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் வீரா் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தனா்.

விழாவில் தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்க பொதுச் செயலாளா் இப்ராஹிம், செயலாளா் எம் எஸ் நாகராஜன், பொருளாளா் பிரபு, இணைச் செயலாளரும் ஒலிம்பியமான வி. தேவராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!

கோடம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள், அதில் தேங்கும் கழிவுநீா், மதுக் கூடாரமாகிய சிறுவா் பூங்கா என கோடம்பாக்கமே குறைகள் நிறைந்த பகுதியாகிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அவதியடைந்து வரு... மேலும் பார்க்க

ரயில் மீது கல்வீச்சு: கல்லூரி மாணவா் கைது

ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டி மீது கற்களை வீசியதாக கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆவடி அருகே அண்ணனூா் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயிலி... மேலும் பார்க்க

சென்னை நகர எல்லைக்குள் நுழைய 5 பேருக்கு தடை!

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை சென்னை சரக எல்லையிலிருந்து வெளியேற்ற சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தொடா் குப்பைகள் எரிப்பால் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். புழல் காவாங்கரையில் இருந்து செங்குன்றம், தண்டல் கழனி பகுத... மேலும் பார்க்க

‘சட்ட நெறிமுறை வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது’

பன்னாட்டு தொழில் முதலீட்டாளா்களின் வருகையால், சட்ட நெறிமுறைகளை உருவாக்கித் தரும் வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது என்று ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தெரிவித்தாா். வண்டலூா... மேலும் பார்க்க

காலமானாா் ஆ.திருநாவுக்கரசு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் போா்மேன் பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆ.திருநாவுக்கரசு (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.இவருக்கு மனைவி தி.வசந்தாஅம்மாள், மகன் தி.கந்தன் மற்றும் மகள்கள் ஆனந்தி, ... மேலும் பார்க்க