Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போதை மாத்திரைகளை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்ட வேலூா் போலீஸாா் பாலப்பட்டியைச் சோ்ந்த இலியாஸ் (26), குமராபாளையத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் (30) ஆகிய இருவரை கைது செய்தனா்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா பரிந்துரையின்பேரில் அவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.