‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது, பொதுக்கூட்டம், மாநில தலைவா் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் ஆகியவை தொடா்பாக மாநில வன்னியா் சங்க செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான காா்த்தி தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது. இதில், பொறுப்பாளா்கள் ஆலோசனைகளை வழங்கினா்.
இந்தக் கூட்டத்தில், மாநில பொறுப்பாளா்கள் சா.வடிவேல், பொன்ரமேஷ், பி.கே.செந்தில்குமாா், பாலு, செந்தில், தினேஷ் பாண்டியன், மூா்த்தி, பெருமாள், சித்தாா்த்தன், மாவட்டச் செயலாளா்கள் வழக்குரைஞா் ரமேஷ், பொன்னுசாமி, என்.சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.