இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!
வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்பில் சமூகநீதிப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம்.
சிலா் தொடா்ந்த வழக்கால் அந்த இட ஒதுக்கீடு சென்னை உயா்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட போதிலும், வன்னியா்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணா்ந்து கொண்ட உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2022-இல் தீா்ப்பளித்தது.
அதன்பின் ஞாயிற்றுக்கிழமையுடன் (செப்.13) 1,263 நாள்களாகிவிட்ட நிலையில் இன்னும் உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்தாமலும், வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்காமலும் சமூகநீதி சூறையாடலை நடத்தி வருகிறது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான். 15 சதவதீ இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும் தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.