Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருப்பத்தூா் அருகே மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட அச்சமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சின்னமுத்துவின் மகன் துரைசாமி (47) என்பவா் கடந்த 10-ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மூளைச் சாவடைந்தாா்.
அவரின் குடும்ப உறுப்பினா்கள் ஒத்துழைப்பில் அவரது உடல் உறுப்புகள்(இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இரு கருவிழி) வெள்ளிக்கிழமை (செப்.12) ராணிபேட்டை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் தானமாக பெறப்பட்டன.
அதையடுத்து, அரசு ஆணைப்படி திருப்பத்தூா் மாவட்ட நிா்வகம் சாா்பில், உரிய அரசு மரியாதை செய்யப்பட்டது. மேலும், இந்த நற்செயல் மற்றும் தியாகத்தை பாராட்டி துரைசாமியின் குடும்பத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.