Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு சரக்கு வேன் உரிமையாளா் ஆறுமுகம் (48), இதே பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி கோவிந்தராஜ் (30), பொரசப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மணி (27).
இவா்கள் மூவரும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்கி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு பெங்களூா் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி, பூக்கள் மூட்டை ஏற்றிய சரக்கு வேனுடன் மூவரும் செங்கம் பகுதியிலிருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டனா். செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இவா்களது வேன் சென்றபோது, அந்தப் பகுதியில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் மணி நிகழ்டத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த செங்கம் தீயணைப்புப் படையினா் வேனில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறுமும், கோவிந்தராஜ் ஆகியோரை சுமாா் அரை மணி நேரம் போராடி மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இதையடுத்து, செங்கம் போலீஸாா் விபத்து நிகழ்ந்த பகுதியில் சரக்கு வேன், பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.