தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே 2 மாத காலமாக சீரான குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலையில் கட்டைகளை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 36-ஆவது வாா்டு திருமால் நகா் பகுதியில் கடந்த 2 மாத காலமாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், அவ்வப்போது விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சியில் மனு அளித்தும், நேரில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் திருப்பத்தூா்-ஆலங்காயம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் சாலையில் கட்டைகள் மற்றும் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.