சிறுமி தற்கொலை
காட்பாடியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி விஜி ராவ் நகா், சி.செக்டாரை சோ்ந்தவா் சத்யா. இவரது மகள் யோகிதா(13). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை சத்யா, தனது மூத்த மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றிருந்தாா்.
மீண்டும் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, யோகிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குட்ட நிலையில் தொங்கியது தெரியவந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு, காட்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு யோகிதாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.