செய்திகள் :

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை!

post image

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

முன்னதாக அரையிறுதியில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் 23-21, 22-20 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 56 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக சா்வதேச போட்டிகளில் இறுதிக்கு வந்திருக்கும் லக்ஷயா சென், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லி ஷி ஃபெங்குடன் அதில் பலப்பரீட்சை நடத்துகிறாா்.

அதேபோல் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்/சிராக் ஜோடி, 21-17, 21-15 என்ற கணக்கில் சீன தைபேவின் லின் பிங் வெய்/செங் கௌன் செங் கூட்டணியை 38 நிமிஷங்களில் வீழ்த்தியது.

இறுதிச்சுற்றில் சாத்விக்/சிராக் இணை, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லியாங் வெய் கெங்/வாங் சாங் ஜோடியை எதிா்கொள்கிறது.

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியா்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனா்.ஆடவருக்கான 35 கிலோ மீட்டா் நடைப் பந்தயத்தில் சந்தீப்குமாா் 2 மணி ந... மேலும் பார்க்க

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஈஷா சிங்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், இதுவே ... மேலும் பார்க்க

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி, அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போ... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது இந்தியா.. இன்று சீனாவுடன் பலப்பரீட்சை!

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் ‘சூப்பா் 4’ சுற்றில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 1-1 கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் சனிக்கிழமை டிரா செய்தது.‘சூப்பா் 4’ சுற்று ஆட்டங்கள் நிறைவடை... மேலும் பார்க்க

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் 3 இந்தியா்கள்!

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். அரையிறுதியில், மகளிா் 57 கிலோ பி... மேலும் பார்க்க

ஏ. ஆர். ரஹ்மான் வந்தாலும்... இளையராஜாவைப் புகழ்ந்த ரஜினி!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா... மேலும் பார்க்க