நாட்டறம்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணிகள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!
நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் தாா் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 13-ஆவது வாா்டு சாய்பாபா நகரில் நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம், ரூ. 24 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் அதிகாரிகளுடன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் யமுனா, உதவிப் பொறியாளா் சிவபாதசேகரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, நாட்டறம்பள்ளி ஒன்றியம், கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 33.90 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனா்.
திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், பொறியாளா் சுதாகா், ஊராட்சித் தலைவா் ஜெயா சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.