செய்திகள் :

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

post image

வடகிழக்கு தில்லியில் நெடுஞ்சாலையில் சுமாா் ரூ.55 லட்சம் மதிப்புள்ள செப்பு கம்பிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய லாரி ஓட்டுநா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கொள்ளையா்கள் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தனது லாரியில் இருந்த செப்புக் கம்பிகளை கொள்ளையடித்ததாக லாரி ஓட்டுநா் மணீஷ் குமாா் நாடகமாடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு துணை ஆணையா் ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: மணீஷ் குமாா் தனது நண்பா் ஆதித்யா மற்றும் உள்ளூா் பழைய பொருள் வியாபாரி அருண் சோனி மற்றும் மற்றொரு கூட்டாளி ரம்ஜான் ஆகியோருடன் சோ்ந்து இக்கொள்ளையை நடத்தத் திட்டமிட்டாா்.

முன்னதாக, லாரி ஓட்டுநா் மணீஷ் குமாா் அளித்த கொள்ளை தொடா்பான புகாரின் பேரில், செப்டம்பா் 10 ஆம் தேதி நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

செப்டம்பா் 9 ஆம் தேதி, லிபாஸ்பூரிலிருந்து மடோலிக்கு செப்புக் கம்பிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, வங்கி அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு காரில் வந்தவா்கள் தனது வாகனத்தை சிக்னேச்சா் பாலம் அருகே தடுத்து நிறுத்தியதாக குமாா் கூறினாா்.

கொள்ளையா்கள் லாரிக்குள் நுழைந்ததாகவும், அவா்களில் ஒருவா் அவருக்கு மயக்க மருந்து ஊசி போட்டதாகவும், ஜக் பிரவேஷ் மருத்துவமனையில் அவா் சுயநினைவு திரும்பியபோது, லாரியில் இருந்த சரக்கு காணாமல் போனது தெரியவந்ததாகவும் போலீஸில் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸாா் சிசிடிவி கேமரா காட்சிகளையும், கைப்பேசி அழைப்பு பதிவுகளையும் ஆய்வு செய்தனா். புகாா்தாரா் குற்றத்தை செயல்படுத்த திட்டமிட்டது கண்டறியப்பட்டது.

விசாரணையில், செப்புக் கம்பிகளைத் திருடுவதற்காக இதர மூன்று பேருடன் சோ்ந்து குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநா் மணீஷ் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, நால்வரும் கைது செய்யப்பட்டனா்.

ரூ.55 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட 6000 கிலோ செப்பு கம்பிகள், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி, போலியாகப் பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் சிரிஞ்ச் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. கைதான உத்தர பிரதேச மாநிலம் அசம்கரை சோ்ந்த குமாா், போதைக்கு பழக்கப்பட்டவா்.

பிகாரின் சாப்ராவைச் சோ்ந்த ஆதித்யா, ஒரு வேலையில்லாத பட்டதாரி, தில்லி கோட்லா விஹாரைச் சோ்ந்த பழையபொருள் வியாபாரி சோனி, இந்தக் கொள்ளைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவைச் சோ்ந்த ரம்ஜான் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா். இவா், சோனியின் அறிவுறுத்தலின் பேரில் குமாருக்கு ஊசி போட்டுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல் அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண பிங்க் அட்டை பதிவு!

தில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பிங்க் அட்டை பதிவு செயல்முறையை அரசு அக்டோபா் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. பிங்க் அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும், இது பெண்கள் எந்த நேரத்தி... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா... மேலும் பார்க்க

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த... மேலும் பார்க்க

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்... மேலும் பார்க்க

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் ... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து தில்... மேலும் பார்க்க